வேலுடையான்பட்டு  சிவசுப்ரமணியர் திருக்கோயில்
அருள்மிகு வள்ளி தேவசேனா உடனாய அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில், (வில்லுடையான்பட்டு என்னும்) வேலுடையான்பட்டு, நெய்வேலி.
முருகப்பெருமான் கையில் வில் அம்புடன் சுயம்புவாகத் தோன்றி வள்ளி தேவசேனாவுடன் அருட்காட்சி தரும் ஒரே திருத்தலம் வேலுடையான்பட்டு.
 
தற்போதைய நெய்வேலி நகரியம் ஒரு காலத்தில் அடர்ந்த வனமாக விளங்கிய போது, தேவர்கள் மற்றும் முனிவர்களின் தவத்திற்கு இணங்கி முருகப்பெருமான், முதலில் ஜோதியாகவும், பின்னர் வில்லும் அம்பும் ஏந்திய வேடுவராகவும் திருக்காட்சி அளித்த திருத்தலம் வேலுடையாம்பட்டு.
மண் மூடியிருந்த திருக்கோயிலை கி.பி. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்ரகாடவன் என்ற பல்லவ வம்சத்து மன்னரின் பசுக்கள் மேய்ந்த போது பால் சொரிந்த காட்டுப் பகுதி வேலுடையாம்பட்டு.
காட்டில் மேய்ந்த பசுக்கள் காட்டில் பால் சொரிந்ததை அறிந்து, அந்த இடத்தை சித்ரகாடவன் மண்வெட்டியால் வெட்டியபோது ரத்தம் பெருகிய இடம் வேலுடையாம்பட்டு.
அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், தமக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படி கட்டளையிட்டதன் விளைவாக 13-ம் நூற்றாண்டில் உருவான திருத்தலம் வேலுடையான்பட்டு.
பக்தர்கள் அனைவரின் பிரார்த்தனையையும நிறைவேற்றும் பிரார்த்தனைத் திருத்தலமாக விளங்குவது வேலுடையான்பட்டு.