சிறப்பு மத உரிமையைப் பெற்ற முதல் அமெரிக்க சீக்கியர்

வாஷிங்டன்: பணியில் இருக்கும் சமயங்களில், சீக்கிய மத அடையாளங்களை பராமரித்துக்கொள்ள, அமெரிக்க சீக்கியரான ஹர்பிரீத்திந்தர் சிங் என்பவருக்கு அமெரிக்க விமானப்படை நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி அவர் பணியில் இருக்கும்போதே, தலைப்பாகை, தாடி வைத்துக்கொள்வதோடு தனது நீளமான முடியையும் வெட்ட வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டு இவர் விமானப்படையில் சேர்ந்தார்.

ஆனால், விமானப்படையில் இருந்த பலவித கட்டுப்பாடுகளின் காரணமாக, இவரால் தன்னுடைய மத அனுஷ்டானங்களைப் பின்பற்ற முடியவில்லை. ஆனால், சீக்கிய அமெரிக்க அனுபவஸ்தர்கள் கூட்டணி மற்றும் அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் பெற்ற பிறகே, ஹர்பிரீத்திந்தர் சிங்கிற்கு இந்த மத அனுஷ்டான உரிமைகள் கிடைத்தன.

அந்தவகையில், ஹர்பிரீத்திந்தர் சிங்தான் பணியில் இருக்கும்போதே சீக்கிய மத அனுஷ்டானங்களை கடைபிடிக்கும் உரிமையைப் பெற்ற முதல் அமெரிக்க சீக்கியர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

கார்ட்டூன் கேலரி