டில்லி:

பாகிஸ்தானில் சீக்கியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவம் பெரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என சுஷ்மா சுவராஜ் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணம் ஹன்கு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளால் சீக்கிய சமூதாயத்தினர் இஸ்லாமிய மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் சீக்கியர்கள் கவலை அடைந்திருப்பதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்’ வெளியிட்டுள்ளது.

‘‘சீக்கியர்கள் கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். இந்த விவகாரத்தை உடனடியாக பாகிஸ்தான் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்’’ என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இதற்கு சுஸ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ பாகிஸ்தான் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கவனத்துக்கு இப்பிரச்சனை கொண்டு செல்வோம்’’ என தெரிவித்துள்ளார்.