ஜம்மு:

ஜம்மு -காஷ்மீரில் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 135 பேர் மீது மாணவர்கள் வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு காஷ்மீரை சேர்ந்த சீக்கியர்கள் உணவும் புகலிடமும் அளித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்பால் பகுதியில் ரோந்து சென்ற பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

அப்போது நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலில் அப்பகுதியில் சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி (22) என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 135 பேர் பாதிக்கப்பட்டனர். கல்வீச்சு சம்பவத்தால் ஸ்ரீநகரில் உள்ள சன் ஷன் ஹோட்டலில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

இந்நிலையில் தவிக்கும் தமிழர்கள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் ஜம்மு காஷ்மீர் சீக்கியர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

கல்வீச்சு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள சீக்கியர்களின் குருத்வாராவில் தங்குமாறு சமூகவலைதளங்களில் காஷ்மீர் சீக்கியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களுக்கு போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்த அவர்கள், உணவுக்கும் ஏற்பாடு செய்தனர்.