சிக்கிம் மாநிலம் இயற்கை விவசாயத்தில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரசாயனங்கள் இல்லாத வகையில்,  இயற்கை முறையான  விவசாயத்தில் சிக்கிம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 80,000 மெட்ரிக் டன்கள் காய்கறிகள் சாகுபடி செய்து வியத்தகு  இமாலய சாதனையை புரிந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் உருவாகியுள்ளது (Sikkim Becomes India’s First Organic State). சிக்கிம் மாநிலத்தின் பெரும்பாலான நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிக்கிம் மாநிலம் எட்டியது. எனவே  சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு  அம்மாநில முதல்வர் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான அரசு, சிக்கிம் மாநிலத்தை முற்றிலுமாக இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து, விவசாயத்துக்கு,  விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து, ரசாயண உரம் பயன்படுத்த அதிரடியாக தடை விதித்தது. அதுபோல ரசாயண உரக்கடைகளையும் அதிரடியாக மூட உத்ததரவிட்டது.

இதையடுத்து, இயற்கை விவசாய முறைக்கு முழுமையான ஆலோசனைகளை வழங்கி வந்தது. மத்திய அரசும் தேவையான உதவிகளை செய்து வந்தது. அதன்படி மாநில விவசாயிகளும் இயற்கை உரத்தையிட்டு விவசாயத்தை பெருக்க தொடங்கினர்.

இதன் காரணமாக மாநிலத்தின்  76,393 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை முறையிலான  விவசாயம் நடைபெற்று வருகிறது. மக்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளை அதிகஅளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான இடுபொருட்களை மாநில அரசு இலவசமாக வழங்கி வருகிறது.

மேலும், மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை, பழ வகைகள் அங்கு பயிரிடப்பட்டு வருகின்றன. இதனால் சிக்கிம் முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக உருவெடுத்துள்ளது.

 

இந்தியாவில் உற்பத்தியாகும் 1.24 மில்லியன் டன் இயற்கை வேளாண்மை பொருட்களில் 80 மில்லியன் டன் பொருட்களை சிக்கிம் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.