சிக்கிம் மாநில தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம்

கேங்டாக்:

சிக்கிம்  மாநில அரசின் தூதுவராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த  புகழ்பெற்ற இசை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிக்கிம் மாநிலத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநிலத்தின் சாதனையை ஏ.ஆர்.ரகுமான்   உலகளாவிய அளவில் ஊக்குவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  மாநிலம் முழுவதும்  இயற்கை முறையிலேயே விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் முதல் மாநிலம் என்ற  அடையாளத்தினையும் சிக்கிம் பெற்றுள்ளது.

சிக்கிம் அதன் இயற்கை மற்றும் அழகிய அழகுடன்  உலக புகழ் பெற்ற சுற்றுச்சூழல் சுற்றுலா இலக்காக உருவானதுடன் நாட்டின் முதல் முழுமையான கரிம வேளாண்மையின் ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளது அதையொட்டியே, மாநில அரசின் சாதனைகளை உலகளாவிய அளவில் ஊக்கும் விக்கும் வகையில் ரகுமான் நியமிக்கப்பட்டு இருப்பதாக  சிக்கிம் மாநில முதன்மை செயலாளர்  ஸ்ரீவஸ்தவா தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமானை சிக்கிம் மாநில  வர்த்தக மற்றும் வணிகத்தின் வர்த்தகத் தூதுவராக நியமித்திருந்த நிலையில், தற்போது மாநிலத்தின்  தூதுவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இது குறித்து சிக்கிம் மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.