சிக்கிம் மாநில முதல் விமானநிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வருகிறது

காங்டாக்:

சிக்கிம் மாநிலத்தில் முதலாவது விமான நிலையம் தயாராக உள்ளது. தலைநகர் காங்டாக்கில் இருந்து 35 கி.மீ. தொலைவில் பாக்யங்கில் அமைந்துள்ள இந்த விமானநிலையம் பிரதமர் மோடி தொடங்கி வைப்பதற்காக காத்திருக்கிறது.

இந்த பசுமை விமானநிலையம் அமைய 2008ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன் மூலம் சிக்கிமில் இருந்து பெரிய நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படும். இதனால் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சுற்றுலா பயணிகள் பாக்தோக்ராவுக்கு விமானத்தில் சென்று பின்னர் அங்கிருந்து பாக்யாங் செல்கின்றனர். புதிய விமானநிலையம் மூலம் 5 மணி நேர பயணம் மிச்சமாகும்.

இந்தியா&சீனா எல்லையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இந்த விமானநிலையில் விமானப்படையினர் தங்களது பல ரக விமானங்களை இங்கே நிறுத்த முடியும். தற்போது நாட்டிலேயே விமானநிலையம் இல்லாத மாநிலமாக சிக்கிம் மட்டுமே உள்ளது. இந்த விமானம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் இந்தியாவில் 100வது விமானநிலையமாக இது விளங்கும்.

குறைந்த கட்டண விமானமான ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள் இந்த விமானநிலையத்திற்கு வெள்ளோட்டமாக விமானங்களை இயக்கி வருகிறது. ரூ. 350 கோடி செலவில் இது அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.