சிலம்பரசன் நடிப்பில் ‘போடா போடி’ இரண்டாம் பாகம் உருவாகிறது..

 

சிலம்பரசன் கதாநாயகனாக நடித்த ‘போடா போடி’ என்ற சினிமா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப்படத்தின் மூலம் தான் விக்னேஷ் சிவன், சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் – ‘போடா போடி -2’ என்ற பெயரில் தயாராகிறது.

சிலம்பரசன் ஜோடியாக இந்த படத்தில் ரித்திகா பால் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

முதல் பாகத்தை தயாரித்த ‘பாடம்’ குமார் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். எனினும் இரண்டாம் பாகத்தை யார் டைரக்டு செய்யப்போகிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

“‘போடாபோடி’ முழுக்க முழுக்க லண்டனில் படமானது. இந்த படத்தையும் வெளிநாட்டில் படமாக்கவே விரும்புகிறேன். ஊரடங்கு கெடுபிடிகள் முழுவதுமாக தளர்த்தப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு மே மாதம் வாக்கில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்” என தயாரிப்பாளர் குமார் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி