ரசிகர்களுக்காக மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவானார் சிம்பு. முதல் வீடியோவாக தனது உடல் ஃபிட்னஸ் வீடியோவை பகிர்ந்து அசத்தினார்.

இதுவரை தனது சமூக வலைத்தளத்தில் படம் சார்ந்த அப்டேட்டுகளையும், அறிவிப்புகளையும் மட்டுமே பதிவு செய்த சிம்பு, தற்போது தனது மருமகன் ஜேசனுடன் காரில் செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார். சிலம்பரசனின் சகோதரியான இலக்கியாTR-ன் மகன் தான் ஜேசன்.

தனது செல்ல மருமகனுடன் காரில் பயணம் செய்யும் சிம்புவின் இந்த லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜேசனிடம் நீ அங்கே செல்ல வேண்டுமா ? அந்த காருக்கு போக வேண்டுமா என்று கேட்கிறார் சிம்பு. ஜேசனின் ஹேர்ஸ்டைலை பார்த்த ரசிகர்கள், சிறுவயதில் சிலம்பரசனை பார்ப்பது போல் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.