அனுஷ்காவின் ‘சைலன்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு…..!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக 14 ஆண்டுகள் நிறைவு செய்த அனுஷ்கா தற்போது ‘சைலன்ஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாதவனுடன் இணைந்து நடிக்கும் அனுஷ்கா, வாய் பேசாத காது கேளாத பெண்ணாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பா ராஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கோனா வெங்கட் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பாக டி.ஜி.விஸ்வபிரசாத் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படம் தெலுங்கில் ‘நிசப்தம்’ என்றும், மற்ற மொழிகளில் ‘சைலன்ஸ்’ என்ற தலைப்பிலும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு.