வெளியானது சைலன்ஸ் திரைப்படத்தின் நீயே நீயே பாடல் வீடியோ…!

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சைலன்ஸ்’.

கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது இப்படம்.

ஏற்கனவே சைலன்ஸ் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் படத்திலிருந்து நீயே நீயே பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . கோபி சுந்தர் இசையமைத்த இந்த பாடலை ஆலப் ராஜு பாடியுள்ளார். கருணா இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார்.