தோல்வியிலும் கண்ணியம் தேவை

கடந்த ஆண்டில் வெளியான  விளையாட்டு கதைகளில் , என்னை மிகவும் வெகுவாகக் கவர்ந்த கதை ஒரு சிறிய ட்விட்டர் பதிவுக் கதை தான். அந்தக் கதை ஒரு விளையாட்டு வீரரையோ அல்லது அணியையோ பற்றியதல்ல. அந்தக் கதை எந்த உடல்வலிமை அல்லது கலைத்திறனுக்கு தொடர்புடையதும் அல்ல. அந்தக் கதை ஒரு ரசிகர் கூட்டத்தைப் பற்றியது.

silence feat

இங்கிலாந்தில் நடைப்பெற்ற ரக்பி உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்காவை ஜப்பான் வீழ்த்திய அந்நாளில், ஒல்லி பர்ராட் என்ற லண்டனைச் சார்ந்த பத்திரிகையாளரின் ட்வீட்டில், “ரயில் பிரைட்டன் நிலையத்தில் நின்றது, தென் ஆப்ரிக்க ரசிகர்கள் ஜப்பான் ஆதரவாளர்கள் ரயிலை விட்டு முதலில் இறங்க வேண்டுமென்று வலியுறுத்தினர், அவர்களுக்கு  பாதுகாப்பான மரியாதை அளித்து, சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். அற்புதமான நாள்.” இந்தக் கதை  நாம் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளத் தகுந்தது ஆகும்.

தோல்வியில் கண்ணியம் எப்போதும் தேவை.
மதம், மொழி, இனம், நாடு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு ஒரு சிறந்த ஆட்டத்தையும் வீரரையும் ஊக்குவிப்பதும் உற்சாகப்படுத்துவதும் தான் ஒரு நல்ல ரசிகனுக்கான அடையாளம். இதற்கு சில அற்புதமான எடுத்துக்காட்டுகள்- சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்ய வெளியே வரும் போது கைத் தட்டி பாராட்டி வரவேற்கும் கூட்டம், ரோஜர் பெடரர் ஆண்டி முர்ரேவை எதிர்த்து விளையாடும் போது கூட பிரிட்டிஷ் கூட்டத்தால் பாராட்டியது, 1999 ல் சென்னை கூட்டம் பாகிஸ்தானியர்களுக்கு எழுந்து நின்று பாராட்டியது என அடுக்கிக்கொண்டே போகலாம்.

silence 2

sil 4

எல்லா நாடுகளும் எல்லா விளையாட்டிலும் எப்போதும் வெற்றி பெறுவதில்லை. அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அநேக ரசிகர் கூட்டத்திற்கு இருப்பதில்லை. சில நாட்களுக்கு முன் நடைபெற்ற உலக கோப்பை டி 20 அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா விளையாடிய போது மும்பை மைதானத்தில் இருந்த மொத்த கூட்டமும் அமைதியாக இருந்தது. அதைப் பார்பதற்கு மிகவும் வியப்பாகவும் வருத்தமாகவும் இருந்தது.
அமைதி என்பது விளையாட்டின் ஒரு பழக்கமான ஒலி ஆகும். அமைதி வார்த்தைகளற்ற அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. அது நம்பிக்கை இறக்கும் போது வருவது, அதற்கு எந்த ஒலியும் இல்லை. எதிர் அணியினர் மட்டும் தான் இந்த அமைதிக்கு சந்தோஷப்படுகின்றனர் ஏனெனில் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று இதற்கு அர்த்தம். ஆனால் அவர்களுக்கும் கூட, குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் போது, அவர்களுக்கு கைத்தட்டல் என்பது ஒரு சிறந்த இசை.

அதனால் அமைதியாக தங்குவது உதவாது. நாம் அணிகள் விட்டுக் கொடுக்க கூடாது என்று நினைப்போம் ஆனால் நாம் அதற்காக எதுவும் செய்ய மாட்டோம். அமைதி என்பது நமது இடத்திற்கு சிறந்த அணிகளை அழைத்து அவர்களை ஒப்பு கொள்ளாமல் மரியாதை கொடுக்காமல் இருப்பதற்கு அர்த்தம். ஆனால் விளையாட்டு வீரர்கள் ஏன் விளையாடுகிறார்கள்? பெயருக்காகவும் கோப்பைகளுக்காகவுமா? ஆம், ஆனால் ஃபெடரர் சொல்வது போல, பிரம்மாண்டமான பெரிய அரங்கில் விளையாடுவதும் அந்நியர்களால் பாராட்டப்படுவதும் ஒரு முக்கிய காரணம். அவர்கள் விளையாடும் போது அவர்களை கைத்தட்டி குரலெழுப்பி பாராட்டி ஊக்கிவிப்பது நமது கடமை. அது ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் ஆகும். அமைதியாக இருப்பது அவர்களது திறனை ஏளனப்படுத்துவதுப் போன்றது.

விளையாட்டிற்கு பல குடையாணி பக்கங்கள் உள்ளது, ஆனால் நாம் அதை ஒரு பக்க செயல்பாடாக திருப்ப முடியும். இங்கு ஒரு கிரிக்கெட் அணி தான் முக்கியம் ஆனால் கிரிக்கெட் முக்கியம் இல்லை. ஒரு எதிர் அணி வீரரின் ஆட்டத்திற்கு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது துரோகச் செயல் போலக் கருதப்படுகிறது. விளையாட்டு எப்போது இவ்வளவு சாதாரணமாக ஆனது?

இது இந்தியாவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ளது. ரசிகர் வட்டம் ஒரு பக்கச்சார்பான, உணர்ச்சி மிகுந்த, முரண்பாடான நடவடிக்கை ஆகும். ஒரு விளையாட்டு குழுவோடு நம்மை ஒட்டிக்கொள்ளுதல் மனித விசுவாசத்தின் பழமையான செயல்பாடுகளில் ஒன்றாகும். நிச்சயமாக, விளையாட்டு என்பது போட்டி தான், ஆனால் அது இரண்டு அணிகளுக்கு நடுவில் நடப்பது , அவர்கள் ஒருவருக்கொருவர் சோதனை செய்து அவர்களுக்குள் இருக்கும் சிறந்ததை கண்டுபிடிப்பது. அது ஒரு அழகான கூட்டு வேலை. ஒன்றாக இருந்தால் மட்டுமே திறமையை கண்டுபிடிக்க முடியும். இதற்கு மகிழ்ச்சியான ஆரவாரம் தகுந்தது தானே?

1967 ல் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் பிஷன் பேடி அவரது அபாரமான பந்து வீச்சிற்கு பாராட்டுகள் பெற்றார். இந்தியாவிலும், பெருந்தன்மை தழைத்தோங்கியது. இயன் சாப்பல், டௌக் வால்டர்ஸ் மற்றும் கீத் ஸ்டாக்போல் ஆகியோர் கொண்ட ஆஸ்திரேலிய அணி சென்னையில்  விளையாடிய போது இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவை பெருமளவில் உற்சாகப்படுத்தினர்.  அப்போது இருந்த ரசிகர் கூட்டம் மிகவும் ‘அறிவார்ந்த சென்னை கூட்டம்’, சென்னை மட்டுமல்லாமல் நாட்டில் எல்லா இடங்களிலும் ரசிகர்கள் நடுநிலையாக இருந்து, நல்ல கிரிக்கெட்டை எந்த நாடு விளையாடுகிறது என்பதை பொருட்படுத்தாமல் ஊக்குவித்தனர்.

ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. தொலைக்காட்சியும் இதில் ஒரு பங்கு வகிக்கிறது. நியாயமாக கூற வேண்டுமென்றால், இந்திய பிரீமியர் லீக் வெளிநாட்டு வீரர்களை தழுவுவதில் உதவியது. ஒருவேளை, இந்த நவீன கலாசாரத்தில், மக்கள் விளையாட்டை சந்தோஷமாக ஆரவாரப்படுத்த வராமல் வெற்றியைக் கொண்டாட மட்டும் தான் வருகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி