மீண்டும் பிசி ஆகும் சிம்பு

டிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் தோல்வி அடைந்ததால் சிம்புவுக்கு கடும் மார்க்கெட் சரிவி உண்டானது.   மேலும் சிம்பு படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்ல, அப்படியே வந்தாலும் தாமதமாக வருவது போன்ற புகார்களால் அவருக்கு வாய்ப்பளிக்க பலரும் பயந்தனர்.

அதன் பிறகு மணிரத்னம் தனது செக்கச் சிவந்த வானம் படத்தில் வாய்ப்பு அளித்தார்.   அந்தப் படத்தில் ஏற்கனவே அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, ஜோதிகா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.   அது சிம்புவுக்கு ஒரு தெம்பை அளித்தது.

அவருக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் வெங்கட்  பிரபு தான் இயக்கும் அடுத்த படத்தில் சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளார்.    இந்தப் படத்தை “மிகமிக அவசரம்” படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ்காமாட்சி தனது வி ஹவுஸ் புரடக்சன் மூலம் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தைத்  தொடர்ந்து விஜய் சந்தர், கவுதம் மேனன் ஆகியோரின் படங்களிலும் சிம்புவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.