‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம்….!

‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டு, புதிய பரிமாணத்தில் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் ‘மாநாடு’. தொடக்கத்திலிருந்தே பல இடையூறுகளை சந்தித்து வந்தது .

இதனிடயே வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வேண்டும், மாதத்தில் 15 நாட்களில் படப்பிடிப்பு என பல்வேறு கண்டிஷன்களைச் சிம்பு வைப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு நடிக்கவிருந்த ‘மாநாடு’ படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும்.வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்” என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

கார்ட்டூன் கேலரி