கன்னட பட தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு.. தயாரிப்பாளருடன் மனஸ்தாபம் தீர்ந்தது?

ன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த படம் ’முப்தி’. இப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஞான வேல்ராஜா தயாரிக்க சிம்பு நடிக்க பேசப் பட்டது. இதில் கவுதம் கார்த்திக்கும் நடிக்க தேர்வானார்.

 

இதற்கிடையில் ஞான வேல் ராஜா, சிம்புவுக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் படம் தொடராமல் நின்றது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பேச்சு வார்த்தை நடந்தது, இதையடுத்து தற்போது இருவருக்குள்ளான மனஸ்தாபம் தீர்ந்திருக் கிறதாம்.இதையடுத்து இப்படத்தின் படப் பிடிப்பு கொரோனா ஊரடங்குக்கு பிறகு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ’மாநாடு’ படமும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மிஷ்கின் இயக்கும் படமொன்றிலும் நடிக்க உள்ளார் சிம்பு.