மீண்டும் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு….!

நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் ‘வாலு’. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியானது.

தற்போது மீண்டும் சிம்பு நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் விஜய் சந்தர். இது தொடர்பான பேச்சுவார்த்தை கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே நடந்தது .

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.