‘ஈஸ்வரன்’ படத்தின் டப்பிங் வேலையை முடித்துவிட்டதாக சிம்பு ட்வீட்….!

தன்னை விமர்சித்தவர்கள் கண் முன்பே உடல் எடையை 30 கிலோ குறைத்து ஒல்லியான சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க கிளம்பினார்.

ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடிக்கிறாராம் சுசீந்திரன் என கிண்டல் செய்தவர்கள் முன்னே 22 நாட்களிலேயே நடித்து முடித்துவிட்டார்.

இந்நிலையில் தான் ஈஸ்வரன் படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டேன் என்று கூறி ட்வீட் போட்டுள்ளார் சிம்பு.

சிம்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் இதே வேகம், கமிட்மென்ட்டோடு பல படம் பண்ண வேண்டும். வாழ்த்துக்கள் சிம்பு. இதே வேகத்தில் போனால் வருஷத்திற்கு 4 படங்களில் நடித்துவிடுவார் போன்று என தெரிவித்துள்ளனர்.