“பெரியார் குத்து” ஆல்பம்: பா.ஜ.க.வை கிழித்து தொங்கவிட்ட சிம்பு!

சிம்பு பாடி வெளியாகி உள்ள “பெரியார் குத்து” ஆல்பத்தின் பாடலில், பா.ஜ.கட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தனது அப்பா டி.ஆர். போல நடிகர் சிம்புவும் பல்துறை வித்தகர், நடிப்புடன் இசை அமைத்தல், பாடல் எழுதுதல், பாடல் பாடுதல் என்று ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் “பெரியார் குத்து” என்ற ஆல்பத்தில் பாடியிருக்கிறார். மதன் கார்க்கியி எழுத..  ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க.. சிம்பு பாடியிருக்கும் ‘பெரியார் குத்து’ ஆல்பம் இன்று வெளியானது. (இது குறித்து தனியே செய்தி வெளியிடப்பட்டுள்ளது.)

https://patrikai.com/periyar-kuthu-simbu-album-relesed/

இதில் பா.ஜ.கட்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் எச்.ராஜா தூண்டுதலின் பேரில் பா.ஜ.க.வினர் சிலர் பெரியார் சிலைகளை உடைத்தும், அவமதித்தும் பிரச்சினையை ஏற்படுத்தினர்.

இதைக் குறிப்பிடும் வகையில், “கிழவன் சிலைய உடைக்கும் கழுத என்ன செஞ்சு கிழிக்கும்?” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஆதார் கட்டாயம் என பாஜக வலியுறுத்துவதை விமர்சித்து, “ஆளுங்க வாழணும்..ஏழைங்க சாகணும்…போராளி நசுங்கணும் வெட்கத்த மானத்த ரோஷத்த கூட நீ ஆதார்ல சேர்க்கணும்” என்ற வரியும் இடம்பெற்றுள்ளது.

இதனால் தற்போது சமூகவலைதளத்தில் இப்பாடல் வைரலாகி வருகிறது.