கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்த சிம்பு….!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகரான கடலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட சிம்பு, உடனடியாக அவரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார். ”விரைவில் குணமாகி வீடு திரும்புவீர்கள், கவலை வேண்டாம். நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று ரசிகரிடம் சிம்பு தெரிவித்தார்.