சிம்புவுக்கு திருமணம் நடக்க மண்டியிட்டு படியேறிய ரசிகர்கள் ….!

சிம்புவுக்கு திருமணம் நடக்க வேண்டி முருகன் கோவிலில் மண்டியிட்டு படிக்கட்டு ஏறி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அவரது ரசிகர்கள்.

சிம்புவின் ரசிகர்கள் சிலர் ரத்தினகிரி முருகன் கோவிலில் வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டது அங்கு வருவோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கையில் சிம்பு படத்தை வைத்துக் கொண்டு மண்டியிட்டு படியேறிச் சென்று முருகனை தரிசித்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் மச்சி மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிம்பு ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.