இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகாவின் ஐம்பதாவது படமான “மஹா ” உருவாகி வருகிறது.

ஹீரோயினை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடிக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்துக்காக 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். சிம்பு – ஹன்சிகா சம்பந்தப்பட்டக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.