சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக நடிக்கும் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.

பல வருடங்களாகவே மிஷ்கின் – சிம்பு கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த முறை தான் இந்தக் கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது.