சிம்பு – காவல் ஆணையர் சந்திப்பு எதிரொலி: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின்

செங்கல்பட்டு:

சீமானை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் நடிகர் சிம்பு மாநகர காவல் ஆணையரை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றம் நடிகர் மன்சூர் அலிகான் உள்பட 18 பேருக்கு ஜாமின் வழங்கி உள்ளது.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கடந்த 20நாட்களுக்கும் மேலா  போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  கடந்த 10ந்தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றபோது, அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது  நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் காவலர்கள் தாக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட சீமான் உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள்  பல்லா வரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை காண சென்ற மன்சூர் அலிகானை போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று  நடிகர் சிம்பு காவல் ஆணையரை சந்தித்து மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.