நாம் ஜெயித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நம்மைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கும் : சிம்பு

நீண்ட நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த நடிகர் சிம்பு, நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்பொழுது அவர் பேசும்போது யாருடைய அறிவுரையையும் கேட்காதீர்கள்.

கஷ்டம் வந்தால் கவலைப்படாதீர்கள். கஷ்டம் வந்தால் முதலில் பாட்டுப் போட்டு டான்ஸ் ஆடுங்கள். 10 பேர் நம்மைத் திட்டுகிறார்கள் என்றால் நாம் ஜெயிக்கிறோம் என்று அர்த்தம்.

ங்கள் இப்படி கை தட்டி கை தட்டி ஏற்றி விடுவதால் அவர்கள் என்னைத் தேவையில்லாமல் சீண்டுகிறார்கள். அனைத்துப் பிரச்சினைகளையும் தாண்டி இப்போதுதான் ’மாநாடு’ ஆரம்பித்திருக்கிறது. நீங்கள் இப்படியெல்லாம் செய்தீர்களென்றால் அவர்களுக்கு எப்படி கோபம் வரும்? என கேட்டார் .

மேலும் ‘சிறு வயதில் இருந்தே உங்களின் அன்பால் நடித்து வருகிறேன். இடையில் எனக்காக சிறு இடைவெளி எடுத்துக் கொண்டேன். இப்போது திரும்பி வந்துவிட்டேன். இனி உங்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன். உங்களோடு தான் இருப்பேன்.

நாம் ஜெயித்துக் கொண்டிருக்கும் காலத்தில் நம்மைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கும். ஆனால், என் தோல்விகளின்போது என்னோடு நீங்கள் அனைவரும் நின்றீர்கள். உங்களை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்” என்று சிம்பு பேசினார்.