சிம்பு vs  கௌதம் மேனன்.. பஞ்சாயத்து ஆரம்பம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘அச்சம் என்பது மடமையடா’ பட ஷூட்டிங் அவ்வப்போது  தடைபட்டுக்கொண்டே இருந்தது, சிம்புவால். சரியான நேரத்துக்கு வருவதில்லை என்பதைவிட.. சரியான நாளில் வரவில்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு திடீர் திடீர் என எஸ்கேப்  ஆகி நாள் கணக்கில் தலைமறைவாகிவிடுவார்.

AEM-GAUTHAM-696x496

பொறுத்துப் பொறுத்து பார்த்த கௌதம்மேனன், “இந்த படத்தில் வரும் ‘தள்ளிப் போகாதே’ பாடல்  ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  ஆனால் இந்த பாடலின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இதற்குக் காரணம் சிம்புமதான்.   இந்த  பாடல் இல்லாமல் படம் வெளியானால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று வெளிப்படையாக சிம்பு மீது புகார் கூறினார்.

இதற்கு சிம்பு தரப்பில் இருந்து வெளிப்படையாக பதில் சொல்லப்படவில்லை. ஆனால், “சம்படத்தின் பெரும்பகுதியை சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறேன். இனியும் பொறுக்க முடியாது. பணத்தை எடுத்து வைத்தால்தான் படப்பிடிப்புக்கு  போவேன்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் சிம்பு.

ஆக, அடுத்த பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது!