சிம்பு திருமணம்பற்றி நாங்களே அறிவிப்போம்.. டிஆர், உஷா அறிக்கை..

சிம்பு லண்டன் பெண்ணை மணக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்துஅவரது தந்தை டி.ராஜேந்தர். தாயார் உஷாராஜேந்தர் கூறியதாவது:

எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.
எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

You may have missed