மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் சிம்பு….!

‘மாநாடு’ படத்துக்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கலில் தொடங்கிவிட்டாலும், நாளை (அக்டோபர் 10) முதல் சிம்புவின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது யாருக்குமே தன்னுடைய லுக் வெளியே தெரியக் கூடாது என்று துண்டை வைத்து முழுமையாக முகத்தை மூடிக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 9) காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் சிம்பு.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக திரு பணிபுரிந்து வருகிறார்.

சுசீந்திரன் படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, நவம்பர் முதல் வாரத்தில் ‘மாநாடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் சிம்பு.