சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது சுதா கொங்கரா…..?

தற்போது மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் சிம்பு . சிம்புவின் அடுத்த படங்கள் பற்றி தினம்தோறும் புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது .

சிம்பு அடுத்து மிஸ்கின் உடன் ஒரு படத்தில் இணைகிறார் என சமீபத்தில் செய்திகள் வந்தது.

ஆனால் தற்போது சுதா கொங்கரா பிரசாத் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றும் , அந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

சுதா விஜய்யின் 65வது படத்தினை தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடைசி நேரத்தில் விஜய் பின்வாங்கி விட்டார் என கூறப்படுகிறது .