சிம்பு பாவம்: ஆளே இல்லாத டீ கடையில்…

திக் ரவிசந்திரன்  இயக்கிய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’  திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார் சிம்பு. படம், “ஆபாசக் குப்பை” என்று விமர்சிக்கப்பட்டது. ரசிகர்கள் சீண்ட வில்லை. படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது.

இந்த பெரும் தோல்வியால், தயாரிப்பாளர்கள் எவரும் சிம்பு இருக்கும் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.

வேறு வழியில்லமல், தந்தை டி.ஆரிடம் கோரிக்கை வைத்தார் சிம்பு. கிடப்பில் கிடக்கும் “கெட்டவன்: படத்தை மீண்டும் துவங்கலாம் என்றார். இப்படத்தின் தயாரிப்பாளர் டி.ஆர்தான்.

ஆனால் அவரோ, “யாராவது தயாரிப்பாளர் வர்றாரானு பாரு. இதுவரைக்கும் இருந்தது போல இல்லாமல் ஒழுங்கான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு போ. சர்ச்சைகளில் சிக்காமல் இரு. சொந்தப்படத்தை எல்லாம் அப்புறம் பார்க்கலாம்”என்று சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் யாரோ ஒரு சிலர், சிம்புவின் அடுத்தபடம் “கெட்டவன்”  என்று எழுதியிருக்கிறார்கள்.

உடனே, சிம்பு,

தனது  ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய அடுத்த புராஜெக்ட் பற்றி சமூக வலைதளங்களில் பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமை யாக காத்திருங்கள்’’ என்று  தெரவித்திருக்கிறார்.

“சிம்புவை எல்லோரும் மறந்து ரொம்நாள் ஆச்சு. யாரோ ரெண்டு மூணு பேர், அவரைப் பற்றி வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள் போலும். அதற்காகக ட்விட்டரில் அறிவிப்பு கொடுக்கிறாரா சிம்பு? ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துகிற ஜோக்தான் நினைவுக்கு வருகிறது” என்று கோலிவுட்டில் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.