சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’ .

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் ‘மாநாடு’ படத்துக்கென்று பிரத்யேக ஒப்பந்தம் தயார் செய்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் சிம்பு இப்படத்தில் நடிப்பதாக கையெழுத்திட்டுள்ளார்.

ஜனவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக யுவன், தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொங்கல் விழாவை முன்னிட்டு இந்தப் படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ தகவல்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைந்துள்ளார். மேலும் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் கருணாகரன் ஆகியோரும் மாநாடு படத்தில் சிம்புவுடன் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்பு கடின உடற்பயிற்சி செய்து படத்திற்கு தயாராகிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.