டில்லி:

சிமி (Students Islamic Movement of India) எனப்படும் இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கு ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 ஆண்டு காலம் தடையை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 1977ம் ஆண்டு  உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் ‘சிமி’ எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (Students Islamic Movement of India) தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முழுவதும் கிளைகள் உருவாக்கப்பட்டு பயங்கரவாத செயல்கள் அரங்கேற்றப்பட்டது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் குண்டு வெடிப்பு,  கயா குண்டுவெடிப்பு, சிறை உடைப்பு போன்ற பல்வேறு வழக்குகளில் சிமி அமைப்பினர் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து, சிமி அமைப்புக்கு கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்து மத்திய அரசு உத்தர விட்டது. இந்த நிலையில், சிமி மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது.