பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் மீண்டும் அதிரடி மாற்றம்!

மைசூரு: பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் அப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் அந்த அணி தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவதே இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸானை கிரிக்கெட இயக்குநராகவும், ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் சைமன் கேடிச்சை தலைமைப் பயிற்சியாளராகவும் நியமித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு சீசன் முடிவடைந்த தருவாயில், தலைமைப் பொறுப்பில் இருந்த நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி நீக்கப்பட்டு, கேரி கிறிஸ்டன் மற்றும் நெஹ்ரா போன்றோர் கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு அணி சிறந்த செயல்பாட்டு நிலையை அடைய, ஒற்றை பயிற்சியாளர் முறைக்கு பெங்களூரு அணி மாற வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.