விம்பிள்டன் டென்னிஸ் 2019: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் சிமோனா ஹாலெப்

விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸை வீழ்த்து, ரோமானிய நாட்டை சேர்ந்த சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் முன்னணி வீராங்கனையான செரினா வில்லியம்ஸை, ரோமானியாவின் சிமோனா ஹாலெப் எதிர்கொண்டார்.

 

ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த சிமோனா ஹாலெப், முதல் செட்டை 6 – 2 என்று கைப்பற்றி அசத்தினார். இரண்டாம் செட்டிலும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அவர், மீண்டும் 6 – 2 என்று வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கார்ட்டூன் கேலரி