நீளும் புறக்கணிப்போர் பட்டியல் – யு.எஸ்.ஓபனில் ஆடுவதில்லை என ‘நம்பர் 2’ சிமோனா அறிவிப்பு!

புகாரெஸ்ட்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப்பும் விலகியுள்ளார்.

உலகளவில் கொரோனா பரவலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதால், அந்நாட்டில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து பல நட்சத்திரங்கள் தொடர்ந்து விலகிய வண்ணம் உள்ளனர்.

ஏற்கனவே, ரஃபேல் நாடல்(ஸ்பெயின்), பியான்கா(கனடா) மற்றும் ஆஷ்லே பார்டி(ஆஸ்திரேலியா) உள்ளிட்ட பிரபலங்கள் விலகிவிட்டனர். இதனால், அமெரிக்க ஓபன் டென்னிஸ் கலையிழந்து காணப்படும் என்ற கருத்து ஏற்பட்டது.

இந்நிலையில், ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும் தொடரைப் புறக்கணித்தோர் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார். இவர், உலகின் நம்பர் 2 வீராங்கனையாக உள்ளார்.