தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சிம்ரன்.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் டிக்டாக் வீடியோக்கள் பலவற்றையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது சிம்ரன் சூப்பர்ஹிட் தெலுங்கு பாடலான புட்ட பொம்மா பாட்டுக்கு டான்ஸ் ஆடி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிம்ரனின் நடனத்தை பாராட்டி வருகின்றனர். புட்ட பொம்மா பாடலுக்கு உண்மையில் ஆடிய பூஜா ஹெக்டேவை விட சிம்ரன் நன்றாக ஆடி இருக்கிறார் என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
அடுத்து தன் கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கிறார். விக்ரமின் துருவ நட்சத்திரம், மாதவானின் ராக்கெட்ரி, வணங்காமுடி, சுகர் ஆகிய படங்கள் உள்ளன.