சந்திரமுகி 2பாகத்தில் சிம்ரன் நடிக்கவில்லை.. அதிகாரபூர்வ விளக்கம்..

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா நயந்தாரா நடித்த படம் சந்திரமுகி. கடந்த 2005ம் ஆண்டு திரைக்கு வந்து சூப்பர் ஹிட் ஆனது. ஹிட் இப்படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். முதல்பாகத்தில் ரஜினிகாந்த் ஏற்று நடித்த லக லக கதாபாத்திரமான வேட்டையன் பாத்திரத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இதில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க மறுத்து விட்டதையடுத்து அவரது அனுமதி பெற்று லாரன்ஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் சந்திரமுகி நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்தில் நடிப்பாரா என்று கேட்ட போது அவரும் தனக்கு அதுபோல் வாய்ய்பு எதுவும் வரவில்லை என்றார். இந்நிலையில்தான் இரண்டாம் பாகத்தில் சந்திரமுகி பாத்திரத்தில் சிம்ரன் நடிப்பார் என்று கூறப்பட்டது. அதை அவரும் மறுத்திருக்கிறார்.
’சந்திரமுகி 2ம் பாகத்தில் நான் நடிப்பதாக வந்த தகவல் உண்மை அல்ல. என் ரசிகர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அதில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை. இதுபோன்ற செய்திகளை உறுதி செய்துகொண்டு வெளியிட வேண்டும்’ என்றார் சிம்ரன்.