சிம்ரனின் மகளிர் தின வாழ்த்து…!

1997ஆம் ஆண்டு விஐபி படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் சிம்ரன். பின் தமிழில் கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டிப் பறந்தவர்

கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட சிம்ரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் உலக மகளிர் தின வாழ்த்துகளை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை விமானநிலையத்திலிருந்த பெண் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அற்புதமான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் .