‘ஒரே தேர்தல்:’ வரும் 7, 8ந் தேதிகளில் முக்கிய கட்சிகளுடன் ஆலோசனை: மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டில்லி:

த்திய பாஜக அரசு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற பாராளுன்ற தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிளை மேற்கொண்டு வருகிறது ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன்னெடுத்து வருகிறது. . இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரே தேசம், ஒரே தேர்தலால் பொதுமக்களின் வரிப்பணம் மிச்சமாகும் என்றும், இதுகுறித்து முக்கிய அரசியல் கட்சிகளுடன் வரும் 7 மற்றும் 8ந்தேதி ஆலோசனை நடைபெற இருப்பதாகவும்  மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் அதற்கான சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்றும், ஒரே நேரத்தில்  தேர்தல் நடத்து வதற்கு அனைத்து மாநிலங்களும் சம்மதம் தெரிவித்தால், இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு இரு தேர்தல்களும் சேர்ந்து  நடைபெற வாய்ப்பில்லை என்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ராவத் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து,  வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் அனைத்து முக்கிய கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என  தெரிவித்துள்ளார்.

மேலும்,  நாட்டில் அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்படுவ தாக கூறிய அமைச்சர்,  70 ஆண்டு கால ஜனநாயகத்தை கொண்ட நமது நாட்டில் நிலையான தேர்தல் முறை வேண்டும் என சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

5 வருடத்திற்கு ஒருமுறை நாடாளுமன்றத்துக்கும், அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடை பெற்றால் மத்தியில் மட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெறும்.

இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.