ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் 4500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்: தேர்தல் ஆணையம்

டில்லி:

த்திய பாஜக அரசு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்ற பாராளுன்ற தேர்தல் முறையை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தலைமை தேர்தல் கமிஷன், மத்திய சட்ட ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.

அதில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் வாங்குவதற்கு மட்டும் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு,  ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன்னெ டுத்து வருகிறது. இதன்படி, சட்டமன்ற தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தினால், செலவு மிச்சமாகும் என்று கூறி வருகிறது.

மத்திய அரசின் இந்த ஆலோசனைக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 7, 8ந்தேதி முக்கிய கட்சிகளுடன் மத்திய சட்ட ஆணையம், இந்திய தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் ஆகும் செலவினங்கள், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய சட்ட ஆணையத்துக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.

அதில்,  ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்க வேண்டும் என்றும்,  இதற்காக கூடுதலாக பல லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. இதற்கு மட்டும் சுமார்  4 ஆயிரத்து 555 கோடி ரூபாய் செலவாகும் என்று கூறி உள்ளது.

மேலும், வரும் காலங்களில் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, அதற்கேற்றார்போல வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும், அப்போது புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு மேலும் சில ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவைப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் 3 தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்  என்பதால், அதன்புறகு புதிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்றும், அதற்காக மேலும் பல கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய நிதிஆயோக் மற்றும் மத்திய அரசு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிதிச்செலவு குறையும் என்று கூறி வரும் நிலையில், தேர்தல் ஆணையமோ நிதிச்செலவு அதிகரிக்கும் என்று தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: simultaneously election: the cost will be more than Rs 4500 crore: the Election Commission letter to central legal authority, ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் பாதிக்கப்படும் மாநிலங்கள் எது?
-=-