விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘தளபதி 63’ படத்துக்கு 16 இளம்பெண்கள் தேர்வு

யக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘தளபதி 63’ என பெயரிடப் பட்டுள்ளது. இந்த படம்  கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தெரிகிறது.

இதற்காக 16 இளம்பெண்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். தளபதி 63 படத்திற்கு  ஆஸ்கார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக் கிறார். அத்துடன் விஜய்க்கு ஜோடியாக படத்தில்  நயன்தாரா நடிக்கிறார். மேலும்  நடிகர் விவேக், யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள  தளபதி 63 படத்தை  ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில்  நடிகர் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சி அளிக்கும் கோச்சாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக வாட்டம் சாட்டமான  16 இளம் பெண்களை படக்குழு தற்போது தேர்வு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 16 newcomer gals, Attlee director, Sports based film, Thalapathy63, Vijay film, இளம்பெண்கள் தேர்வு, கால்பந்து கோச், டைரக்டர் அட்லீ, தளபதி 63':, நடிகர் விஜய்
-=-