ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ்: இறுதிபோட்டியில் பி.வி.சிந்து, சமீர் வர்மா

800x480_image60668864ஹாங்காங்கில் உள்ள கோவ்லூன் நகரில், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் மகளிர் மற்றும் ஆடவர் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்தியா சார்பாக மகளிர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நோவல் மற்றும் ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம், சமீர் வர்மா, எச்.எஸ்.பிரணாய் பங்கேற்றனர். இதில் எச்.எஸ்.பிரணாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும், சாய்னா நோவால் மற்றும் அஜய் ஜெயராம் காலிறுதி சுற்றில் தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறினர்.

அரையிறுதிக்கு முன்னேறிய சமீர் வர்மா மற்றும் பி.வி.சிந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். அரையிறுதியில், தரவரிசையில் 3-ம் நிலையில் உள்ள வீரர் டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்ஜன்சனை 21-19, 24-22 என்ற நேர் செட்களில் சமீர் வர்மா தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

அதேபோல், மகளிர் பிரிவில் பி.வி.சிந்து 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை சியூங் கான் யி-யை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் உடன் மோத உள்ளார்.