தங்கம் வெல்லும் மனஉறுதியுடன் சுவிட்சர்லாந்து புறப்பட்ட சிந்து!

புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள 2019 பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்திய வீராங்கணை சிந்து.

பிரேசில் நாட்டில் கடந்தமுறை நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் இந்த சிந்து. கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபன் போட்டியில் இவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டியில் ஜப்பான் நாட்டின் அகானே யமகுஷியிடம் தோற்றுப்போனார்.

இதுதவிர, அடுத்து நடந்த ஜப்பான் ஓபன் போட்டியிலும், அதே யமகுஷியிடம் தோற்றுப்போனார். இந்தமுறை தோற்றது காலிறுதிப் போட்டியில்.

இந்த 2019ம் ஆண்டில் நடைபெற்ற பல போட்டிகளில் ஒரேயொருமுறை மட்டுமே இறுதிக்கு தகுதிபெற்றார் சிந்து. ஆனால், இந்தமுறை சுவிட்சர்லாந்து போட்டியில் எப்படியும் தங்கம் வெல்வேன் என்று நம்பிக்கையுடன் புறப்பட்டுள்ளார் சிந்து!