சிந்துவை கண்டுகொள்ளாத தமிழக அரசு: காரணம், விஜயகாந்தா?

அண்டை மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த பி.வி.சிந்து, ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார்.

சிந்து
சிந்து

அவருக்கு தெலுங்கானா மாநில அரசு  ஐந்து கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. ஆந்திரா மூன்று கோடி,  டில்லி, இரண்டு கோடி ரூபாய் என பல மாநிலங்களும் தனியார் நிறுவனங்களும் பரிசுகளை வார் வழங்குகின்றன.

ஆனால், தமிழக அரசு சார்பில் கனத்த மவுனமே நிலவுகிறது.

ஜெயலலிதா - விஜயகாந்த்
ஜெயலலிதா – விஜயகாந்த்

“தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மகன், விஜய பிரபாகரன் நடத்தி வரும், ‘சென்னை ஸ்மாஷர்ஷ் பாட்மின்டன் அணி’யில், சிந்து விளையாடியவர். இதனால்தான் சிந்துவை, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை” என்று பேசப்படுகிறது.

அரயில்தான் விளையாட்டாகிவிட்டது… விளையாட்டிலாவது அரசியலை கலக்காமல் இருக்கலாமே!

இந்தியாவை பெருமைப்பட வைத்த சிந்துவுக்கு பரிசு அளிக்காவிட்டாலும், அவரது பெயரில் பாட்மிண்டன் அகடமி துவங்கி, கவுரப்படுத்தலாமே” என்கிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.