நீதிபதியின் மருமகள் – அன்று புகார் கொடுத்தவர் இன்று வீடியோ வெளியிட்டார்..!

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நூட்டி ராம் மோகன் ராவ் என்பவரின் மருமகள், தனது மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகிய மூவரும் சேர்ந்து உடல்ரீதியாக தாக்குதல் நடத்தும் காட்சியை வீடியோவாக வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.

இந்தாண்டு ஏப்ரலில், மேற்கண்ட மூவரும் வரதட்சியை கேட்டு தன்னை அடித்ததாக புகார் பதிவு செய்திருந்தார். அந்நிலையில், தற்போது அதுதொடர்பான சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஏனெனில், தன் புகாருக்கான ஆதாரமாக அவர் இதை வெளியிட்டுள்ளதாகவும், இதனடிப்படையில் காவல்துறையினர் இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தான் தனது கணவரின் குடும்பத்தினர்களிடம் பட்ட சித்ரவதை மற்றும் தனக்கான ஒரு வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ள சந்தித்த சிரமங்கள் மற்றும் தனது குழந்தைகளுக்காக தான் விரும்புவது ஆகியவை குறித்து அவர் ஊடகங்களிடம் விரிவாக பேசினார்.

அதேசமயம், இந்த வீடியோ குறித்துப் பேசிய முன்னாள் நீதிபதியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், இந்த வீடியோக்கள் உண்மையானவை இல்லை என்றும், நிஜ வீடியோக்கள் வெளியிடப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளனர்.

இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.