இன்று ரிலீஸாகவிருந்த ‘சிந்துபாத்’ படத்தின் காலை 8 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.

இந்தப் படம், கடந்த மே 16-ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.. பிறகு, ஜூன் 21-ம் தேதி ‘சிந்துபாத்’ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாகக் கடந்த வாரமும் படம் ரிலீஸாகவில்லை.

பிறகு, இன்று (ஜூன் 27) காலை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி சினிமாவில், காலை 8 மணிக்குப் படம் திரையிடப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக 8 மணி காட்சி ரத்து என அறிவிக்கப்பட்டது.