விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’, வருகிற 28-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.

இந்தப் படம், கடந்த மே 16-ம் தேதி ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு, ஜூன் 21-ம் தேதி ‘சிந்துபாத்’ ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை காரணமாகக் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 28) படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.