விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிக்கும் படம் ‘சிந்துபாத்’ .ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, வருகிற 16-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. வருகிற 17-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘Mr. லோக்கல்’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது திடீரென ‘சிந்துபாத்’ படம் போட்டியில் இருந்து விலகியுள்ளது. போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பது உள்ளிட்ட சில காரணங்களால் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அனேகமாக வரும் ஜூன் மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..