உ.பி.: தேசியகீதம் பாட தடை விதித்த பள்ளிக்கு சீல்! நிர்வாகி கைது!!

அலகாபாத்:

உ.பி. மாநிலம் அலகாபாத்தில், தேசிய கீதம் பாட தடை விதித்த தனியார் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது உ.பி.அரசு.

சீல் வைக்கபட்ட பள்ளி - நிர்வாகி
சீல் வைக்கபட்ட பள்ளி – நிர்வாகி

அலகாபாத்த நகர் பஹாராவில் உள்ள எம்.ஏ. கான்வென்ட் என்ற  இஸ்லாமியருக்கு சொந்தமான தனியார் பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசியக் கீதம் பாட தடை விதித்து அதன் மேலாளர் ஜியா உல் ஹக் என்பவர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகி மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைக்கும் இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கக்கூடாது என, பள்ளி நிர்வாகியின் இந்த ஆணையை எதிர்த்து,  அந்தப் பள்ளியின் முதல்வர் உள்பட 8 ஆசிரியர்கள் தங்களது வேலையை ராஜினா செய்தனர்.

இதுகுறித்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கூறியபோது, கடந்த 12 ஆண்டுகளாகவே இந்த பள்ளியில் இந்திய தேசிய கீதம் பாட அனுமதிப்பதில்லை என்ற தகவலை வெளியிட்டனர்.  அதேபோல் அந்த பள்ளி அரசு அங்கீகாரம் இல்லாமலே 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

school-759

இதன் காரணமாக உத்தரபிரதேச அரசு, இந்த பள்ளி குறித்து, கல்வி அதிகாரிகளைக் கொண்டு உடனே விசாரணை நடத்த உத்தரவிட்டது. விசாரணையில், அந்தப் பள்ளி  அனுமதியின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதன் காரணமாக கல்வித்துறை  அதிகாரிகள்  நேற்று அந்த பள்ளிக்கு சீல் வைத்தனர். பள்ளியின் மேலாளர் ஜியா உல் ஹக்கும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து அலாகாபாத் மாவட்ட ஆட்சியர் அன்ட்ர வம்சி கூறியதாவது:

சீல் வைக்கப்பட்ட தனியார் பள்ளியில் தற்போது படித்து வரும் 300 மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாதவாறு, அவர்களை  வேறு பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கல்வித்துறைக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பள்ளி போதிய அனுமதியின்றி 20 ஆண்டுகளாக எப்படி செயல்பட்டு வந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிக்கு எதிராக யாரேனும் புகார் அளித்துள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகுந்த அனுமதியின்றி 20 ஆண்டுகளாக எப்படி பள்ளி நடத்தப்பட்டது, இதற்கு அதிகாரிகள் உடந்தையா என்பது விசாரணை முடிவடைந்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் முன் எச்சரிக்கையாக  போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.