[embedyt] https://www.youtube.com/watch?v=MnbWE8ZKeBg[/embedyt]

அட்லி இயக்கத்தில் , விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள இப்படத்தில் விஜய், அப்பா (பிகில்) மற்றும் மகன் (மைக்கெல்) என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், விவேக், கதிர், பூவையார், ஐ.எம்.விஜயன், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே என்ற பாடல் லிரிக் வீடியோ யூ-டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இதை வெளியிட்டுள்ளார்.