மலேசியாவிற்கு பறந்த ‘எஸ் 3’ டீம்!

maxresdefault

‘பூஜை’ படத்திற்கு பிறகு ஹரியின் பரபர திரைக்கதையில் ரெடியாகிவரும் படம் ‘எஸ் 3’ (சிங்கம் – 3). சூர்யாவின் ஆக்ஷன் ஜோதியில் வெளியான இதற்கு முந்தைய பாகங்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்துள்ளது.

இதில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாகவும், ஸ்ருதிஹாசன் ரிப்போர்டராகவும் வருகிறார்களாம். இப்படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. தற்போது, மலேசியா பறந்துள்ளது ‘எஸ் 3’ டீம். இங்கு தொடர்ந்து 14 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவரும் இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை வருகிற டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிடவுள்ளது ‘உதயம் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம்.